இந்தியா

இந்திய துணை தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

செய்திப்பிரிவு

எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், பாகிஸ்தான் வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்காக இந்திய துணை தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் உயிரிழந்தார்.

மற்றொரு வீரர் காயமடைந்தார். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 4 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தங்கள் வீரர்களின் மரணத்தால் பாதிப்படைந்த பாகிஸ்தான் ராணுவம் வெள்ளைக் கொடி காட்டி, தாக்குதலை நிறுத்தும்படி கோரியது. இறந்த வீரர்களின் உடலை எடுத்துச் செல்வதற்காக பாகிஸ்தான் ராணுவம் அவ்வாறு கோரியது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கான இந்திய துணை தூதர் ஜெ.பி.சிங்கை அழைத்த பாகிஸ்தான் அரசு, எல்லையில் நடந்த தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT