இந்தியா

நிலத்தில் காலைக்கடன் கழித்ததாக பெண்ணின் நாவை துண்டித்த நில உரிமையாளர்

ஐஏஎன்எஸ்

பிஹாரில் தனது நிலத்தில் காலைக்கடன் கழித்ததாக குற்றம்சாட்டி பெண்ணின் நாவை நிலத்தின் உரிமையாளர் துண்டித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிஹார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டம் அருகே உள்ள சகாயாஸ் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பகவத் சிங் என்பவர் தனது நிலத்தில் பக்கத்து வீட்டு பெண் குஸ்மா தேவி காலைக்கடன் கழித்ததாக கூறி அவரை கண்டிக்கும் விதமாக குஸ்மாவின் நாவை பகவத் சிங் வெட்டியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்ததாகவும் தனது மனைவி வைஷாலியை பகவத் என்பவர் அடித்து கீழே தள்ளி அவரது நாவை துண்டித்ததாகவும் மாவட்ட காவல் நிலையத்தில் கணவர் இந்திரதியோ பாஸ்வான் புகார் அளித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு குடும்பத்தார் இடையேவும் நிலத்தகராறு இருந்து வந்ததாக போலீஸார் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT