பிரகாசம் குறுக்கு அணையிலிருந்து குதித்து 3 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
கிருஷ்ணா ஆற்றிலிருந்து 3 பெண்களின் உடல்களை செவ்வாய் அன்று போலீசார் மீட்டனர். இவர்கள் மூவரும் பிரகாசம் அணையிலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை விஜயவாடா போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் யார் என்பதை இனிமேல்தான் அடையாளம் காணவேண்டும் என்று கூறப்படுகிறது.