காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுப்பட்டனர். இந்த சண்டையில் ராணுவ வீரர் எம்.என்.ராய் உயிரழந்தார்.
உயிரிழந்த எம்.என்.ராய்க்கு நேற்று (குடியரசு தினவிழாவில்) வீர பதக்கம் வழங்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம் அருகே மிந்தோரா என்ற கிராமத்துக்கு ஹிஸ்புல் முஜாகீதின் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். காட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதை உறுதி செய்த வீரர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அப்போது வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். ராணுவ வீரர்களுக்கு தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச்சண்டையில் எம்.என்.ராய் என்ற ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்தனர். மேலும் ஒரு வீரர் காயமடைந்தார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த ராணுவ வீரருக்கு நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் அவரது வீரத்தைப் போற்றி வீர பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.