இந்தியா

புலிகள் எண்ணிக்கை: கர்நாடகாவுக்கு முதலிடம்

செய்திப்பிரிவு

புலிகள் கணக்கெடுப்பு முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த கணக்கெடுப்பின்படி கர்நாடகாவில் 406 புலிகள் உள்ளன. அதிக புலிகள் கொண்ட மாநிலங்களில் கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது.

உத்தர்காண்ட் 2-வது இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 340 புலிகள் உள்ளன. கடந்த கணக்கெடுப்பின்போது உத்தரகண்டில் 227 புலிகள் இருந்தன. கடந்த ஆண்டைவிட உத்தர்காண்டில் புலிகள் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று வெளியிடப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையில், இந்தியா முழுவதும் 2226 புலிகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT