இந்தியா

மத்திய அமைச்சர் மகன் மீதான பலாத்கார வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா மீதான பாலியல் பலாத்கார வழக்கை தள்ளுபடி செய்ய முடி யாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது.

கன்னட நடிகை மைத்திரி கடந்த ஆண்டு ஜூலையில் பெங்களூரு போலீஸில் அளித்த புகாரில், மத்திய அமைச்சர் சதானந்த கவுடா வின் மகன் கார்த்திக் கவுடா தன்னை திருமணம் செய்துகொள்வ தாக ஏமாற்றி பலாத்காரம் செய்து விட்டார் என்றும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் கூறியிருந்தார்.

இதையடுத்து கார்த்திக் கவுடா மீது பாலியல் பலாத்காரம், மோசடி, கடத்தல் உள்ளிட்ட பிரிவு களில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி ஆண்மை பரிசோதனையும் நடத்தினர். சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில் கார்த்திக் கவுடா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மைத்திரி தன் மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. பணம் மற்றும் அரசியல் உள்நோக்கத்துடன் இத்தகைய வழக்கை தொடுத் துள்ளார். எனவே அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த மனுவை நேற்று விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.பி.பூதிஹளே, வழக்கு விசாரணையை நிறுத்த முடியாது. கார்த்திக் கவுடாவின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். வழக்கை தாமதிக்க முயற்சிக்காமல் விரைவில் முடிக்க ஒத்துழைக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.

இதையடுத்து கார்த்திக் கவுடாவை மீண்டும் கைது செய்து விசாரிக்க பெங்களூரு போலீஸார் திட்டமிட்டு உள்ளனர்.

SCROLL FOR NEXT