"வணிக நலன் சார்ந்த முடிவுகளை வணிக நலன் சார்ந்த மன நிலையில் எடுக்க பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் சுதந்திரம் அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது."
பொதுத்துறை வங்கிகளில் அதிகரிக்கும் செயலற்ற சொத்துக்கள் விவகாரத்தை சிறந்த முறையில் கையாள பொதுத்துறை வங்கிகளுக்கு இன்னும் கூடுதல் தன்னாட்சி உரிமை அளிப்பது அவசியம் என்று கூறியுள்ளார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி
வங்கிகளின் வராக்கடன்களின் நிலவரம் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று கூறிய ஜேட்லி, செயலில் இல்லாத சொத்துக்கள் நிலவரமும் “ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை சிறப்பாகச் செயல்பட வைக்க தைரியமான, அமைப்பு ரீதியான மாற்றங்களை அருண் ஜேட்லி வரவேற்றுள்ளார்.
“வங்கி அதிகாரிகளுக்கு பிரச்சினை எங்கு உள்ளது என்று தெரியும், இந்த மாநாடு புதிய பாதையை அமைக்க வழிவகுக்கும்” என்று புனே மாநாட்டில் ஜேட்லி தெரிவித்தார்.
“7-8% வளர்ச்சியை சாதிக்க திட்டமிட்டுள்ளோம், நாட்டின் நிதிநிலைமையை ஸ்திரமாக்கும் இலக்குகளில் கவனம் செலுத்தி வருகிறோம். இப்போது நாட்டின் பொருளாதாரம் மாற்றுருவாக்கத்தில் உள்ளது, எனவே நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வங்கி அமைப்புகளின் வலுத்தன்மையும் மிக முக்கியம்” என்றார்.