இந்தியா

கருப்புப் பண வழக்கில் மொய்ன் குரேஷிக்கு நீதிமன்றம் சம்மன்

செய்திப்பிரிவு

கருப்புப் பண விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வர்த்தகர் மொய்ன் அகமது குரேஷிக்கு எதிராக வருமான வரித் துறையினர் (ஐடி) தொடர்ந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பி உள்ளது.

இறைச்சி ஏற்றுமதியாளரான குரேஷியும் அவரது ஊழியர் ஆதித்ய சர்மாவும் வரும் மார்ச் 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி கூடுதல் தலைமைப் பெரு நகர மாஜிஸ்திரேட் தேவேந்திர குமார் சர்மா நேற்று உத்தரவிட்டார்.

சுமார் ரூ.20 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி குரேஷி மீது வருமான வரித் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

வருமான வரி சட்டத்தின் படி தவறான தகவல் தெரி வித்தது மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் குரேஷி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் நிரூ பணமானால் குரேஷிக்கு அதிக பட்சம் 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும்.

SCROLL FOR NEXT