இந்தியா

பாஜகவில் இணைய நடிகை ஜெயப்பிரதா விருப்பம்

செய்திப்பிரிவு

"மோடியின் தலைமைப் பண்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளேன். எனவே, நான் பாஜகவில் இணைய விரும்புகிறேன்" என நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயப்பிரதா கூறியுள்ளார்.

அவரது இந்தச் அறிவிப்பைத் தொடர்ந்து, வரவிருக்கும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக ஜெயப்பிரதா முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று சலசலக்கப்படுகிறது.

முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய ஜெயப்பிரதா, "நான் பாஜகவில் இணைய விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். மோடியால் பல பெரும் தலைவர்கள்கூட ஈர்க்கப்பட்டுள்ளனர். அவ்வகையில் ஒரு சமூக ஆர்வலராக, அவரது பன்பால் ஈர்க்கப்பட்ட நான் பாஜகவில் இணைய விரும்புகிறேன். இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும் எனது தோழருமான அமர் சிங் பாஜக மூத்த தலைவர்களுடன் பேசி வருகிறார். அவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்" என்றார்.

ஜெயப்பிரதா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 70 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1990-ல் அரசியல் பிரவேசம் செய்த அவர் தெலுங்கு தேசம், சமாஜ்வாதி, ராஷ்டிரீய லோக் தள கட்சிகளில் இருந்துள்ளார். 2014 மக்களவை தேர்தலில் ராஷ்டிரீய லோக்தளம் கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால், பாஜக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.

SCROLL FOR NEXT