இந்தியா

பாஜக.வில் கிரண்பேடி இணைந்ததால் ஆர்.எஸ்.எஸுக்கு அதிருப்தி இல்லை

பிடிஐ

பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி இணைந்ததால், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துக்கு (ஆர்.எஸ்.எஸ்.) அதிருப்தி இல்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், லோக்பால் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு அன்னா ஹசாரே மற்றும் அரவிந்த் கேஜ்ரி வால் ஆகியோரோடு இணைந்து போராடியவருமான கிரண் பேடி, கடந்த வியாழக்கிழமை பா.ஜ.க.வில் இணைந்தார்.

கிரண் பேடி பா.ஜ.க.வில் இணைந்ததன் மூலம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், டெல்லி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கிரண் பேடிக்கு பா.ஜ.க. அதிக முக்கியத்துவம் கொடுப்பதை எதிர்த்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாயின.

ஆனால் இவற்றை நிராகரித் துள்ள ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் தலைவர் மன்மோகன் வைத்யா கூறும்போது, "கிரண் பேடி பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளதால் மோகன் பாகவத் அதிருப்தி அடைந்துள்ளதாக வரும் செய்திகள் பொய்யானவை. பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸுக்கும் இடையே விரிசல் ஏற்படுத்துவதற்காக தீய சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகள் இவை" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

          
SCROLL FOR NEXT