இந்தியா

டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜியின் மகள் போட்டி

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இரண்டாவது அரசியல் வாரிசாக, அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி களம் இறங்குகிறார்.

வரும் பிப்ரவரி 7- ம் தேதி நடைபெறும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், கிரேட்டர் கைலாஷ் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஷர்மிஸ்தா செய்தியாளர்களிடம் கூறும்போது, “நான் சிறுவயது முதல் டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வசிப்ப தால் இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்துள்ள தால், அவற்றை சட்டப்பேரவை உறுப்பினராகி தீர்த்துவைக்க விரும்புகிறேன். எனது தாத்தா, தந்தை ஆகிய இருவருமே காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி தங்கள் வாழ்க்கையை பொதுப் பணிக்காக அர்ப்பணித்தவர்கள். அந்தக் குடும்பத்தில் வந்த எனக் கும் தேர்தலில் வாய்ப்பளித்த காங் கிரஸ் கட்சிக்கு நன்றி” என்றார்.

பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, மேற்குவங்க மாநிலம், ஜங்கிபூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார். இவ ருடன், ஷர்மிஸ்தாவும் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகு லுக்கு நெருக்கமானவர்களாக கருதப்படுகிறார்கள்.

டெல்லியின் கிரேட்டர் கைலாஷ், பாஜக வெற்றித் தொகுதியாக இருந்து வருகிறது. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் குமார் மல்ஹோத்ரா இருமுறை இத்தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந் துள்ளார். இங்கு 1993 டிசம்பரில் நடந்த தேர்தலில் அவரது மகன் அஜய்குமார் மல்ஹோத்ரா போட்டியிட்டு, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சௌரப் பரத்வாஜிடம் தோல்வி அடைந்தார்.

டெல்லியில் ஆம் ஆத்மியின் 49 நாள் ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்த பரத்வாஜ் இங்கு மீண்டும் போட்டியிடுகிறார். இங்கு 3-வது இடத்தை பெற்ற காங்கிரஸ், ஷர்மிஸ்தாவுக்கு வாய்ப்பளித்துள்ளது.

SCROLL FOR NEXT