கங்கையை மாசுபடுத்தும் தொழில் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கங்கையை தூய்மைப் படுத்துவது தொடர்பாக பிரதமர் தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் உயரதிகாரிகள் பலர் பங் கேற்றனர்.
அப்போது கங்கையை முழுமையாக சுத்தப்படுத்த கால அவகாசம் நிர்ணயித்து பணியாற்ற வேண்டுமென்று பிரதமர் மோடி கூறினார். கங்கை நதிக்கரையில் நடத்தப்படும் இறுதிச் சடங்குகள் நதியை மாசுபடுத்தாத வகையிலும் சுற்றுச்சூழலை பாதிக்காத அளவிலும் நடத்த ஏற்பாடுகளை செய்ய பரிந்துரைக் கப்பட்டது. இவை தனியார் துறையின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும்.
கங்கை நதியை மாசுபடுத்தும் தொழில் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அப்போது எச்சரிக்கை விடுத்தார்.