திருப்பதியில் நேற்று ஒரு மாடு, கன்றுக்குட்டி மற்றும் ஒரு நாயை சிறுத்தை கொன்றுள்ளதால் பொது மக்களும் பக்தர்களும் பீதி அடைந்துள்ளனர்.
நேற்று திருப்பதியில் உள்ள தேவஸ்தான மருத்துவமனை யான ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டியூட் ஆஃப் மெடிகல் சயின்ஸ் பின்புறம் உள்ள ஒரு வீட்டின் சுற்றுப்புற சுவர் மீது மாடு, கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் சிதறிக்கிடந்தன. இந்த சுவரின் அருகே ஒரு நாயும் அடித்து கொல்லப்பட்டிருந்தது. இவைகளை சிறுத்தைதான் அடித்துக் கொன்றிருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
சம்பவம் நடந்த இடம், பக்தர்கள் மலையேறி செல்லும் வழிக்கு மிக அருகில் உள்ளது. இதுகுறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.