இந்தியா

மேற்கு வங்கத் தேர்தலில் 2,926 வேட்பாளர்கள் போட்டி

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்​தில் ஏப்​ரல் 23 மற்​றும் 29 ஆகிய தேதி​களில் இரண்டு கட்​டங்​களாக வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்​ளது. தேர்​தல் முடிவு​கள் மே 4-ம் தேதி அறிவிக்​கப்பட உள்​ளது. இந்​நிலை​யில், முதல்​கட்ட தேர்தலுக்​கான வேட்பு மனு தாக்​கல் நடை​முறை​கள் ஏற்கெனவே முடிவடைந்​தது.

இதையடுத்​து, இரண்​டாம் கட்ட தேர்​தலுக்​கான வேட்​புமனு தாக்​கல் செய்ய ஏப்​ரல் 9 கடைசி நாளாக இருந்​தது. ஏப்​ரல் 10-ம் தேதி மனுக்​கள் பரிசீலனை செய்​யப்​பட்​டன. வேட்பு மனுக்​களைத் திரும்​பப் பெற ஏப்​ரல் 13, பிற்​பகல் 3:00 மணி வரை அவகாசம் வழங்​கப்​பட்​டது. இதையடுத்​து, இரண்டாம் கட்ட தேர்​தலுக்​கான இறுதி வேட்​பாளர் பட்டியல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதன்​படி, முதற்​கட்ட தேர்​தல் நடை​பெறும் 152 தொகு​தி​களில் 1,478 வேட்பாளர்கள், 2-ம் கட்ட தேர்​தல் நடை​பெறும் 142 தொகுதிகளில் 1,448 வேட்​பாளர்​கள் என மொத்​தம் 2,926 பேர் போட்​டி​யிடு​கின்​றனர்​.

          
SCROLL FOR NEXT