இந்தியா

4 வடகிழக்கு மாநிலங்களில் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு

செய்திப்பிரிவு

மக்களவைக்கான 2ம் கட்டத் தேர்தலில் மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா, அருணாசலப்பிரதேசம் ஆகிய 4 வட கிழக்கு மாநிலங்களில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு புதன்கிழமை நடந்தது.

இந்த தேர்தலுடன் அருணாசலப் பிரதேச சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 60 உறுப்பினர்களை கொண்ட இந்த சட்டசபைக்கு ஏற்கெனவே 11 காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

மக்களவைக்கான தேர்தலில் நாகாலாந்தில் 84.64 சதவீதம், மணிப்பூரில் 80 சதவீதம், மேகாலயத்தில் 71 சதவீதம், அருணாசலப் பிரதேசத்தில் 55 சதவீத வாக்குகள் பதிவாகின.

அருணாசலப் பிரதேசத்தில் அருணாசல் மேற்கு, கிழக்கு ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும், மேகாலயத்தில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் உள்ள ஒரே ஒரு தொகுதிக்கும், மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளில் ஊரகத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடந்தது. மணிப்பூர் உள் தொகுதிக்கு ஏப்ரல் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும்.

SCROLL FOR NEXT