இந்தியா

அசரம் பாபு வழக்கில் முக்கிய சாட்சி சுட்டுக்கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

செய்திப்பிரிவு

சாமியார் அசரம் பாபு வழக்கில் முக்கிய சாட்சியாக திகழ்ந்த அகில் குப்தா என்பவர் உத்தரப்பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

35 வயதான அகில் குப்தா, சாமியார் அசரம் பாபுவின் மடத்தில் சமையல் பணியாளராக இருந்தார்.

இந்நிலையில், அசரம் பாபு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2013-ல் கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டபோதே வேறொரு பாலியல் பலாத்கார வழக்கும் அவர் மீது பாய்ந்தது.

இத்தகைய சூழலில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட அகில் சுட்டுக்கொல்லப்பட்டார்.சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அசரம் வழக்கின் முக்கிய சாட்சி கொல்லப்பட்ட வழக்கில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவம் அசரம் வழக்கில் அகில் சாட்சியாக இருந்ததால் நடைபெற்றுள்ளதா இல்லை வேறு ஏதும் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

SCROLL FOR NEXT