இந்தியா

டெல்லி வந்தார் அமெரிக்க தூதர் ரிச்சர்டு வர்மா

செய்திப்பிரிவு

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக புதிதாக நியமிக்கப் பட்டுள்ள இந்திய வம்சாவளி அமெரிக்கர் ரிச்சர்டு வர்மா நேற்று டெல்லி வந்து சேர்ந்தார்.

46 வயதான வர்மா இதற்கு முன் சட்ட விவகாரங்களுக்கான துணை அமைச்சராக பதவி வகித்தவர். இந்தியாவுக்கான அமெரிக்கத் தூத ராக நியமிக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கர் இவர்.

வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். இந்நிலையில் ஒபாமாவின் வருகைக்கு முன் இந்தியாவுக்கான புதிய தூதராக வர்மா பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் ரிச்சர்டு வர்மா நேற்று வெளியிட்ட அறிக்கை யில், “அமெரிக்கா இந்தியா இடை யிலான இருதரப்பு உறவு வியக்கத் தக்க அளவில் இருக்கும் இத்தருணத்தில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்று வதில் பெருமிதம் கொள்கி றேன். இரு நாடுகளின் பொது நோக்கங்களான பாது காப்பு, வளர்ச்சி, மற்றும் முன்னேற் றத்துக்காக இந்திய மக்கள் மற்றும் இந்திய அரசுடன் இணைந்து பணி யாற்றுவதை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன். அமெரிக்கா இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்தும் பணியை தொடரு வேன்” என கூறியுள்ளார்

SCROLL FOR NEXT