இந்தியா

பாரீஸ் தாக்குதல் இஸ்லாத்துக்கு இழுக்கு: ஒமர் அப்துல்லா

செய்திப்பிரிவு

மதத்தின் பெயரில் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு மிகப் பெரிய இழுக்கை சேர்க்கும் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளியாகும் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஒமர் அப்துல்லா, "மதத்தின் பெயரில் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு மிகப் பெரிய இழுக்கை சேர்க்கும். அத்தகைய தீவிரவாதிகளால் மற்ற முஸ்லீம்களுக்கும் கெடுதல் நேர்கிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT