திருப்பதி திருமலை கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நேற்று ஏழுமலையானை தரிசனம் செய்ய 12 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது. பொங்கல் விடுமுறை என்பதாலும் ஐயப்ப பக்தர்கள் சபரி மலையில் இருந்து திரும்புவதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் சர்வ தரிசனம் செய்ய நேற்று 12 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர். மேலும் ரூ. 300 சிறப்பு தரிசனத்துக்கு 6 மணி நேரம் வரையிலும் பாதசாரி பக்தர்கள் 8 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை sதரிசித்தனர்.