இந்தியா

நிரந்தர இடம் பெயர்வால் உ.பி.யில் 2.88 கோடி வாக்காளர்களின் எஸ்ஐஆர் படிவங்கள் தேக்கம்

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசத்​தில் 2.88 கோடி வாக்​காளர்​கள் தங்​களுக்​கான எஸ்ஐஆர் படிவங்​களை வாங்க வரவில்​லை. இதற்கு நிரந்தர இடம் பெயர்வு காரணம் என தெரிய​வந்​துள்​ளது.

உத்தர பிரதேசத்​தில் நடை​பெறும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​யில், 2.88 கோடி பேர் தங்​களுக்​கான படிவங்களை வாங்க வரவில்லை. இவர்​களில் 1.30 கோடி பேர் நிரந்​தர​மாக இடம்​பெயர்ந்​திருந்​தது வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​யின் போது அடை​யாளம் காணப்பட்​டது. இவர்களின் சதவீதம் மொத்த வாக்​காளர்​களில் 8.4 சதவீதமாக உள்​ளது.

அடுத்​த​தாக கண்​டு​பிடிக்க முடி​யாத வாக்​காளர்​களாக 79,52,190 பேர் உள்​ளனர். இவர்​களின் எண்ணிக்கை 5.15 சதவீத​மாக உள்ளது. இவர்​கள் பெரும் ​பாலானோர் தற்​காலிக​மாக இடம் பெயர்ந்தவர்​கள், வீடு மாறிய​வர்​கள், தவறான முகவரியை உடையவர்களாக உள்​ளனர்.

மொத்த வாக்​காளர்​களில் 46,23,796 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். இவர்​கள் 2.99 சதவீத​மாக உள்​ளனர். 25,47,207 வாக்​காளர்​கள் வேறு இடங்​களில் தங்​கள் பெயர்​களை பதிவு செய்​துள்​ளனர். 7,74,472 படிவங்​கள் முழு​மை​யாக பூர்த்தி செய்​யப்​ப​டா​மலும், தவறான தகவல்​களு​ட​னும் உள்​ளன.

இங்கு வரைவு வாக்​காளர் பட்​டியல் ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்பட​வுள்​ளது. இந்த பட்​டியலில் விடு​பட்​ட​வர்​கள், பிப்ரவரி 27-ம் தேதி தங்​களுக்​குரிய படிவங்​களை வழங்கி பெயரை சேர்த்​துக் கொள்​ளலாம். இறுதி வாக்​காளர் பட்​டியல் மார்ச் 6-ம் தேதி வெளி​யிடப்​படும்​ என உத்​தர பிரதேச தலைமை தேர்​தல்​ அதி​காரி நவ்​தீப்​ ரின்​வா தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT