இந்தியா

மோடி தனது மனைவி பெயரை அறிவித்தது எப்படி?: பின்னணியில் காஞ்சி காமாட்சி அம்மனின் அருள் எனத் தகவல்

சா.கார்த்திகேயன்

பாஜக கூட்டணியின் பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன் இருப்பதாக அக்கோயில் வட் டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

நரேந்திர மோடி தனது மனைவி யசோதா பென் பெயரை வேட்பு மனுவில் குறிப்பிட்டவுடன், அது நாடு முழுவதும் மாபெரும் விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு, பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது. இந்த விவாதத்தின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், மோடி தனது மனைவியின் பெயரை அறிவிக்கும் முடிவுக்கு பின்னணியில் காஞ்சி புரம் காமாட்சியம்மன் இருப்பதாக அக்கோயில் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் கடந்த மார்ச் 14-ம் தேதி உலக நன்மை வேண்டி தச மஹா வித்யா ஹோமம் தொடங் கியது. மார்ச் 23-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலர் முரளிதர ராவ், தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதன் பிரசாதத்தை கோயில் பிரதான அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி எடுத்துக்கொண்டு மார்ச் 26-ம் தேதி டெல்லியில் உள்ள மோடியை சந்தித்து கொடுத்துள் ளார். பிரசாதத்தில் காஞ்சிபுரம் காமாட்சியம்மனின் பட்டுப் புடவையும் இருந்துள்ளது. இந்த பட்டுப் புடவையை கொண்டு சென்ற நடராஜ சாஸ்திரி, ’’இந்தப் புடவையை உங்கள் மனைவியிடம் கொடுங்கள்’’ என்று மோடியிடம் கூறினாராம். சற்று மௌனம் காத்து பின்னர் வியந்துபோய் நரேந்திர மோடி பிரசாதத்தை பெற்றுக்கொண்டாராம். அம்பாள் பக்தரான நரேந்திர மோடி, காமாட்சியம்மனின் பட்டுப் புடவை வழங்கப்பட்டதையும், அதை அவரது மனைவியிடம் கொடுக்கு மாறு கூறியதையும் காமாட்சியம்ம னின் உத்தரவாக எடுத்துக்கொண் டார். அதன் பிறகே வேட்புமனு தாக்கலின்போது, தனது மனைவி யின் பெயரை குறிப்பிட்டார் என்று அக்கோயில் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து நடராஜ சாஸ்திரி யிடம் கேட்டபோது, நரேந்திர மோடியை சந்தித்ததும், அவருக்கு அம்மனின் பட்டுப் புடவை வழங்கப் பட்டதும் உண்மை. இதன் பின்னரே அவருக்கு மனமாற்றம் ஏற்பட்டு மனைவி பெயரைத் தெரிவித் துள்ளார் என்றார் அவர்.

SCROLL FOR NEXT