பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக உளவு பார்த்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ) புகைப்படக்காரராகப் பணிபுரியும் ஈஷ்வர் சந்திர பெஹரா என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர் கடந்த 10 மாதங்களாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக ஏவுகணை பரிசோதனை மையத்தை உளவு பார்த்துள்ளார். அவரிடம் இருந்து இரண்டு கணினி டிஸ்க்குகள், இரண்டு கைப்பேசிகள் மற்றும் வங்கி பாஸ்புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட் டுள்ளன.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி அசித் பனிக்ரஹி கூறும்போது, "உளவுத் துறையிடம் இருந்து பெஹராவின் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் குறித்து தகவல் வந்ததையடுத்து நாங்கள் அவரைக் கைது செய்தோம். விசாரணையின்போது தான் உளவு பார்த்ததை ஒப்புக் கொண்டார்" என்றார்.