உத்தரப் பிரதேசத்தில் வாழும் நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவர் கள், தங்களை மிகவும் பிற்படுத் தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க் காததால் கிறிஸ்தவ மதத்துக்கு மாறப்போவதாக எச்சரிக்கை விடுத் துள்ளனர்.
மாநிலத்தின் மேற்கில் உள்ள ஆக்ரா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில், நாடோடி சமூகங்களில் ஒன்றான தன்கர்ஸ் இனத்தைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். மிகவும் பின்தங் கிய நிலையில் உள்ள இவர்கள், தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வர்கள் பட்டியலில் சேர்க்குமாறு கோரி வந்தனர். மாயாவதி உ.பி. முதல்வராக இருந்தபோது, தன்கர் இனத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக அலுவல் ரீதி யிலான நடவடிக்கைகள் முழுமை அடைவதற்குள் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது. இதை யடுத்து தன்கர் இனத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தன்கர் சமூக தலை வர்களில் ஒருவரான ஜிதேந்தர் சிங் ‘தி இந்து’விடம் கூறும்போது, “அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்கு வங்கியை மனதில் வைத்து எங்கள் வாழ்க்கையை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதை எதிர்த்து தீவிரமாக போராடி வரும் எங்கள் இனத் தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர். வேறு எந்த சமூகத்தவர்களுக்கும் இல்லாத வகையில் எங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இத னால் கடந்த மாதம் நடந்த எங்கள் மஹா பஞ்சாயத்தில், அனைவரும் கிறிஸ்தவர்களாக மாற முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
கடந்த மாதம் ஆக்ராவில் முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தால் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் பெரும்பகுதி முடங்கியது. இந்தச் சூழலை சாதகமாக்கிக் கொண்டு தன்கர் சமூகத்தினர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என கருதி, உ.பி.யில் ஆளும் அகிலேஷ் யாதவ் அரசு மவுனம் சாதிப்பதாகக் கருதப்படுகிறது.