இந்தியா

சாரதா நிதி மோசடி: முகுல் ராயிடம் சிபிஐ விசாரணை

செய்திப்பிரிவு

பல ஆயிரம் கோடி ரூபாய் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான முகுல் ராயிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 3 சுற்றுகளாக, சுமார் 5 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் முகுல் ராய் கூறும்போது, “சாரதா நிறுவன மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரி கள் விசாரணைக்கு அழைத்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பேன் என தொடக்கம் முதலே கூறிவருகிறேன். இந்த மோசடியில் உண்மை வெளிவரவேண்டும் என்றே விரும்புகிறேன்” என்றார்.

இதனிடையே சிபிஐ வெளிட்டுள்ள தகவலில், “முகுல் ராயை மீண்டும் விசாரணைக்கு அழைப்போம். என்றாலும் இதுதொடர்பான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT