வரும் மக்களவைக் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை வெளியிட்டது. மகாத்மா காந்தியின் கொள்ளுபேரன் ராஜ்மோகன் காந்தி கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முப்பது பேர் கொண்ட இந்தப் பட்டியலை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் டெல்லி அமைச்சருமான மணிஷ் சிசோதியா வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அடுத்த ஐந்து நாட்களில் இந்த வேட்பாளர்களைப் பற்றிய விவரங்கள் கட்சி யின் இணையதளத்தில் வெளியிடப் படும்’’ என்றார்.
இந்தப் பட்டியலில், டெல்லி, பஞ்சாப், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் தலா ஒரு வேட்பாளர் பெயரும் ஹரியாணா வில் ஐந்து, மத்தியப் பிரதேசத்தில் ஆறு, மகாராஷ்டிராவில் பத்து மற்றும் ராஜஸ்தானில் மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ஆம் ஆத்மி கட்சியில் சமீபத்தில் இணைந்த ராஜ்மோகன் காந்தி, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகனும் காங்கிரஸ் வேட்பாளருமான சந்தீப் தீட்சித்தை எதிர்த்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வேட்பாளர்கள் நர்மதை நதி உட்பட சம்மந்தப்பட்ட மாநிலங் களின் சமூகநல போராட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
டெல்லி எம்எல்ஏக்கள் யாரையும் மக்களவைத் தேர்தலில் நிறுத்தப் போவதில்லை என ஆம் ஆத்மி அறிவித்திருந்தது. எனினும், அர்விந்த் கேஜ்ரி வால் ஹரியாணாவில் போட்டியிடு வார் எனக் கருதப்படுகிறது.
இதுவரை 50 வேட்பாளர்களின் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.