கங்கை ஆற்றில் உள்ள டால்பின் களின் எண்ணிக்கை குறித்து முதன் முறையாக கணக்கெடுப்பு நடத்த மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள் ளது. பிப்ரவரில் தொடங்கும் இந்த கணக்கெடுப்பு 2 மாதங் களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம் நாட்டின் கடல்வாழ் உயிரி னங்களில் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டிருப்பது டால்பின். இந்தியாவில் அதிகரித்து வரும் டால்பின் குறித்து ஆய்வு செய்வ தற்காக பிஹார் மாநிலம் பாட் னாவில் தேசிய டால்பின் ஆய்வு மையம் அடுத்த ஆண்டு தொடங் கப்பட உள்ளது.
இதன் சார்பில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஓடும் கங்கை ஆற்றில் உள்ள டால்பின்கள் குறித்த கணக்கெடுப்பை முதன் முறையாக நடத்த மத்திய நீர் வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கையை சுத்தப்படுத்தும் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இத்துறையின் அமைச்சர் உமா பாரதி தலை மையில் டெல்லியில் கடந்த வாரம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதில் கலந்துகொண்ட பாட்னா பல்கலைக்கழக பேராசிரியர் ஆர்.கே.சிங், ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
டால்பின்களால் கங்கை ஆறு சுத்தமாகிறது என்பதால் அதை கணக்கெடுத்து பாதுகாப்பது அவசியமாகிறது. இதைச் செய்ய இருக்கும் தேசிய டால்பின் ஆய்வு மையம், முதல்கட்டமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுப்பை நடத்தும். மேலும் கடலோரங்களில் வாழும் டால்பின் வகைகள் பற்றிய கணக்கெடுப்பையும் அடுத்த ஆண்டு தொடங்கும்.
உலகம் முழுவதும் 41 வகை யான டால்பின்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இதில் 37 வகைகள் கடல்வாழ் டால்பின் களாக உள்ளன. இவற்றை ஆய்வு செய்த கொச்சி தேசிய கடல் வாழ் மீன்வள ஆராய்ச்சி மையம், 25 வகை டால்பின்கள் நம் நாட்டின் கடலோரங்களில் இருப்பதாக பதிவு செய்துள்ளது. மீதம் உள்ளவற்றில் மூன்று மட்டும் ஓடும் ஆறுகளில் வாழும் வகையைச் சேர்ந்தவை. இவை தென் ஆப்ரிக்காவில் உள்ள அமேசான் ஆறு, பாகிஸ்தானின் சிந்து ஆறு மற்றும் இந்தியாவின் கங்கை ஆறுகளில் வாழ்கின்றன.
இமய மலையில் உற்பத்தியாகி ஓடும் கங்கை ஆற்றில் உள்ள டால்பின், வட இந்திய மாநிலங் களான ம.பி., உ.பி., பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங் களில் மட்டுமே வாழ்கின்றன. எனவே, அந்த மாநிலங்களில் மட்டும் தேசிய அளவில் முதன்முறையாக நடைபெறவிருக்கும் கணக்கெடுப்பு பிப்ரவரியில் தொடங்கி இரண்டு மாதங்களில் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசு தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது.
ஓடும் ஆற்றின் மூன்று வகை டால்பின்கள் பற்றிய கணக் கெடுப்பை இதுவரை பல்வேறு தனியார் அமைப்புகள் நடத்தி யுள்ளன. அதன்படி, அமேசான் ஆற்றில் ஐந்தாயிரத்திற்கும் கூடுத லாகவும், சிந்துவில் சுமார் 1600 மற்றும் கங்கையில் 3000 முதல் 3100 வரையும் டால்பின்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கங்கை மற்றும் சிந்து ஆறுகளில் வாழும் டால்பின்களுக்கு பார்வை கிடையாது. உலகிலேயே பிஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில்தான் டால் பின் சரணாலயம் உள்ளது. இவ்வாறு ஆர்.கே.சிங் தெரி வித்தார்.
டால்பின் பற்றிய ஆய்வுகளில் உலகப் புகழ் பெற்ற ஆர்.கே.சிங், இந்திய டால்பின்களின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் டால்பின்கள் பற்றி நூற்றுக் கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரை களையும் நான்கு நூல்களையும் எழுதி உள்ளார். டால்பின் சம்மந்தப் பட்ட அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் ஆர்.கே.சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள் கிறார்.