முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் கொலை வழக்காக பதிவு செய்துள்ள டெல்லி போலீஸார், சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸி செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “சுனந்தா மரணம் தொடர்பான வழக்கில் டெல்லி காவல் துறை துணை ஆணையர் (தெற்கு) தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சுனந்தா மரணத்தின்போது கிடைத்த தடயங்களின் அடிப்படை யில் புலனாய்வுக் குழுவினர் சம்மந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்துவார்கள். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்க தாமதமானதால் வழக்கு பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது” என்றார்.
மருத்துவ அறிக்கையின்படி, சுனந்தாவுக்கு ‘பொலோனியம் 210’ என்ற பயங்கரமான வேதிப் பொருள் கலந்த விஷம் அளிக்கப் பட்டிருக்கலாம் எனக் கருதப்படு கிறது. இந்தப் பொருள் சுனந்தாவின் உடலில் இருந்ததை உறுதிப்படுத்துவதற்கான பரிசோ தனைக்கூடங்கள் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடு களில் மட்டுமே உள்ளன. எனவே, சுனந்தாவின் சில உறுப்புகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக டெல்லி காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக சுனந்தாவின் கணவர் சசி தரூர், அவரது வீடு மற்றும் அலுவலகப் பணியாளர்கள், உறவினர்கள் மற்றும் அவர் இறந்த ஐந்து நட்சத்திர விடுதி பணியாளர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக டெல்லி காவல்துறை ஆணையர் பாஸிக்கு நவம்பர் 12-ல் தரூர் எழுதிய புகார் கடிதம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த நவம்பரில் தனது பணி யாளர் நாராயண் சிங்கிடம் விசாரணை நடத்திய 4 அதிகாரி களில் ஒருவர், அவரை அடித்து துன்புறுத்தியதாகவும், சுனந்தாவை நாங்கள் இருவரும் சேர்ந்து கொன்றதாக ஒப்புக் கொள்ளும்படி வற்புறுத்தியதாக வும் தரூர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கு விசாரணைக்கு முழு ஒத் துழைப்பு அளித்து வருவதாகவும் அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.