இந்தியா

நிலக்கரி சுரங்க முறைகேடு முன்னாள் முதல்வருக்கு சம்மன்

செய்திப்பிரிவு

நிலக்கரி சுரங்க முறை கேடு வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உட்பட 8 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் முதலமைச் சராக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக மதுகோடா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இவ்வழக்கில், மது கோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் ஹெச்.சி.குப்தா, ஜார்க்கண்ட் முன்னாள் தலைமைச் செயலாளர் அசோக் குமார் பாசு மற்றும் 5 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT