அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இந்தியா வந்துள்ள அவரது மனைவி மிஷெலுக்கு சிறந்த வேலைப்பாடுகள் கொண்ட பனாரஸ் பட்டு சேலை பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்தப் பகுதியின் தனித்தன்மை வாய்ந்த இந்த கதுவா பட்டுப் புடவை கிரீம் நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகள் கொண்டு பாரம்பரிய நெசவாளர்கள் மூவர் இந்த சேலையை 3 மாத காலம் நெய்தனர். 400 கிராம் எடை கொண்ட இந்த சேலையின் மதிப்பு ரூ.1.5 லட்சம் ஆகும்.
வாரணாசியில் 3 தலைமுறைகளாக பட்டுசேலை வியாபாரம் செய்துவரும் அப்துல் மேட்டின், இந்த சேலையை நேற்று முன்தினம் டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
மிஷெலுக்கு பனாரஸ் பட்டு சேலைகள் மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்து, அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர் ஃபிராங்க் இஸ்லாமின் மனைவி இந்த பட்டு சேலைக்கு ஆர்டர் கொடுத்தார்.