இந்தியா

ஊடுருவிய சிமி தீவிரவாதிகளை பிடிக்க சிறப்பு படை: ஆந்திர காவல் துறை இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

ஆந்திராவுக்குள் ஊடுருவியதாக கூறப்படும் சிமி தீவிரவாதிகளை பிடிக்க சிறப்பு படை அமைக்கப் பட்டுள்ளதாக ஆந்திர காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ராமுடு கூறினார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத் தில் தொடர்புடைய சிமி தீவிர வாதிகள் 5 பேர் நெல்லூர் மாவட்டத்துக்குள் ஊடுருவியுள்ள தாக ஆந்திர போலீஸாருக்கு சென்னை புலனாய்வு துறைபோலீஸார் தகவல் அளித்தனர். இதன்படி நெல்லூர், சித்தூர் மாவட்ட எல்லைகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஆந்திர போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர டிஜிபி ராமுடு தலைமையில் ஆந்திரம், தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிய அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து டிஜிபி ராமுடு கடப்பாவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தீவிரவாதிகளின் நடமாட்டம் மட்டுமின்றி, செம்மர கடத்தலையும் முற்றிலுமாக தடுக்க தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் கூட்டு முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் மூலம் சிமி தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். ஆந்திராவுக்குள் ஊடுருவி யதாக கூறப்படும் சிமி தீவிரவாதி களை பிடிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. செம்மரக் கடத்தலில் முக்கிய புள்ளியான கங்கி ரெட்டியை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT