பிரதமருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க நிறுவனங்களால் அமைக்கப்படும் அணு உலை களில் வடிவமைப்பு குறைபாடுக ளால் விபத்து ஏற்பட்டால், அதற்கு அந்த நிறுவனங்களை பொறுப் பாக்குவதில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இது கவலை அளிப்பதாக உள்ளது.
அணுஉலை விபத்துகளுக்கு பொறுப்பேற்பதற்காக 2010-ம் ஆண்டு நாடாளுமன்றம் நிறை வேற்றிய சட்டத்தை நீங்கள் அறிவீர்கள். இதன் நோக்கமே அணுஉலை அமைத்துத் தரும் நிறுவனத்திற்கு (சப்ளையர்) பொறுப்பை உண்டாக்குவதாகும். அப்போதுதான் பன்னாட்டு நிறு வனங்கள் தரமான பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தும்.
இதற்கு முன் மிலி தீவு, செர்னோபில், ஃபுகுஷிமா உள் ளிட்ட அணு விபத்துகள் அனைத் துக்கும் வடிவமைப்பு குறைபாடு களே காரணம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
ஃபுகுஷிமாவில் விபத்துக்குள் ளான மார்க்-1 அணுஉலை, அமெரிக்க நிறுவனமான ஜி.இ. வடிவமைத்ததாகும். 1972-ம் ஆண்டிலேயே இக்குறைபாடு அந்த நிறுவனத்துக்கு தெரியும் என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி கூறியது. இருப்பினும் ஜப்பானின் பொறுப்புடமை சட்டம் சப்ளையருக்கு பாதுகாப்பு அளிப்பதால் ஜப்பானில் பாதிக்கப்பட்ட மக்களால் ஜி.இ. நிறுவனத்தை பொறுப்பாக்க முடியவில்லை.
இப்படிப்பட்ட நிலைமையை தவிர்க்கத்தான் இந்திய சட்டம் 17(பி) பிரிவு சப்ளையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உரிமையை அளிக்கிறது. அமெரிக்க ரசாயன ஆலையால் ஏற்பட்ட போபால் கோர விபத்து அனுபவம் இந்திய சட்டம் உருவாக காரணமானது. இந்திய உச்ச நீதிமன்றமும் ‘முழு பொறுப்பு’ கோட்பாட்டை உருவாக்கியுள்ளது.
அதன்படி பொதுமக்களுக்கு ஏற் படும் பாதிப்புக்கு அந்த அணு உலை தொடர்பான அனைத்து நிறுவனங்களும் பொறுப் பேற்க வேண்டும் என்று கூறியுள்ளது.
பத்திரிகை செய்திகளின்படி அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்க இந்திய பொதுத்துறை உள்ளிட்ட காப்பீடு நிறுவனங்கள் தொகுப்பு அமைக்க இந்திய அரசு ஏற்றுக்கொண் டுள்ளது. இது, 2010 சட்டத்துக்கு முற்றிலும் எதிரானதாகும்.
அமெரிக்க நிறுவனங்கள் சர்வதேச காப்பீடு நிறுவனங்களிடம் இருந்து காப்பீடு பெறவேண்டும். அவர்களுடைய அணு உலைகள் பாதுகாப்பானவைதான் என்று அவர்கள் நாட்டு காப்பீடு நிறுவனங்களையே அவர்களால் திருப்தி செய்யமுடியவில்லை என்பதையே இது காட்டுகிறது.
இந்திய மக்கள் எதற்காக அமெரிக்க நிறுவனத்துக்கு காப்பீடு அளிக்க வேண்டும்? இந்த பொறுப்பு பிரச்சினை தவிர, அமெரிக்காவிலிருந்து அணு உலைகளை ஏன் வாங்கவேண்டும் என்று பலர் கேட்கின்றனர்.
நீங்கள் ஒபாமாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் பூடகமாக உள்ளது, ஒருசில தகவல்களே கிடைத்துள்ளன. நான் எழுப்பி யுள்ள கேள்விகள் இந்திய குடி மக்கள் பலரது மனங்களிலும் உள்ளன.
எனவே அவற்றிற்கு வெளிப்படையாக நீங்கள் பதில ளிக்க உடனடி நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.