இந்தியா

ஒபாமா வருகையின் போது கவனத்தை திருப்பும் முயற்சிகள் நடைபெறலாம்: மனோகர் பரிக்கர்

தினகர் பெர்ரி

அமெரிக்க அதிபர் ஒபாமா குடியரசு தினத்தன்று இந்தியா வரும்போது பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக தேசிய ராணுவப் படை முகாம்களை பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

”எல்லைப்பகுதிகள் நன்றாக பாதுகாக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் நடந்து வருவது அங்கு பாதுகாப்பு பிரச்சினையினால் அல்ல, ஆனாலும், கவனத்தை ஈர்ப்பதற்காக, அல்லது ஒபாமா வருகையை முன்னிட்டு கவனத்தைத் திருப்புவதற்கான முயற்சிகள் நடைபெறலாம்.” என்றார்.

தாஜ்மகாலில் பலத்த பாதுகாப்பு

அதிபர் ஒபாமா வருகையை யொட்டி ஆக்ரா நிர்வாகம் அமெரிக்க பாதுகாப்பு ஏஜென்சிகளுடன் இணைந்து முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்தி வருகிறது. கேரி விமான நிலையத்திற்கும் தாஜ்மகாலுக்கும் இடைப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஆக்ரா மண்டலத்தின் காவல்துறை தலைமை ஆய்வாளர் சுனில் குமார் குப்தா, பொறுப்போற்றுள்ளார்.30 பேர் கொண்ட பாதுகாப்புப் படைப் பிரிவு தினமும் பாதுகாப்புப் பயிற்சி மேற்கொண்டு ஆக்ராவில் ஒபாமா தங்குமிடத்தை ஆய்வு செய்கிறார்கள்.

ஜனவரி 27ஆம் தேதி அதிபர் ஒபாமாவும் அவரது குடும்பத்தினரும் தாஜ்மகாலைப் பார்வையிட வரும்போது, அவர்களைச் சுற்றி 500 அமெரிக்க பாதுகாவலர்களும், 5,000 இந்திய பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு வளையமிடுவார்கள். அன்று தாஜ்மகால் பொதுமக்கள் பார்வையிட அனுமதியில்லை. மேலும் கேரி விமான நிலைய சாலைகளிலும் தாஜ்மகாலிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்படும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT