தெலங்கானா மாநிலம், கிருஷ்ண சாகர் கிராமத்தைச் சேர்ந்தவர் புச்சம்மாள் (69).
இவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் அரசு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் முதியோர் உதவித் தொகை பெற்று வருகிறார்.
இந்நிலையில், புச்சம்மாள் தனது மகனுடன் சித்திப்பேட்டை மண்டல அதிகாரி நிம்மாரெட்டியை சந்தித்து “எனது மகன் பாலய்யா அரசு ஊழியராக இருப்பதால் முதியோர் உதவித் தொகையை நிறுத்திவிடுங்கள்.
இதை கஷ்டப்படும் வேறு முதியோருக்கு வழங்குங்கள்” என்று கூறி தனது அடையாள அட்டையை திருப்பிக் கொடுத்தார். இதனை பெற்றுக் கொண்ட கிராம பஞ்சாயத்து துறை அதிகாரிகள் அவரது நேர்மையை வெகுவாக பாராட்டினர்.