மேற்குவங்க மாநிலம் பர்தானில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் பாஜக அரசு பதவியேற்ற 7 மாதங்களில் பணவீக்கம் கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அடுத்து பிஹார், மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இந்த மாநிலங்களிலும் நிச்சயமாக பாஜக ஆட்சியைப் பிடிக்கும். சாரதா சிட்பண்ட் முறைகேட்டில் சிக்கிய திரிணமூல் தலைவர்களை காப்பாற்ற மட்டுமே முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சி மேற்கொண்டு வருகிறார். மாநிலத்தின் வளர்ச்சியில் அவருக்கு அக்கறை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.