இந்தியா

டெல்லி மெட்ரோ பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

செய்திப்பிரிவு

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முகேஷ்குமார் (40), இவர் புதுடெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.

அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முகேஷை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT