குடியரசு தினவிழாவில் மோடி அணிந்திருந்த கோட் விலை ரூ. 9 லட்சம் என டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சொன்னது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியில் பிப்ரவரி 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், ஆம் ஆத்மி சார்பில் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக சார்பில் கிரண் பேடி, காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கான் என மும்முனை போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது, ''குடியரசு தினவிழாவில் மோடி அணிந்திருந்த கோட் விலை ரூ. 9 லட்சம் என்றும், ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி வாக்குறுதி தந்தார். வாக்குறுதி அளித்தபடி வங்கிகளில் பணம் போடப்பட்டதா?'' என ராகுல் கேள்வி எழுப்பினார்.