மும்பையிலிருந்து ஹைதராபாத் நோக்கி தனியார் சொகுசு பஸ் நேற்று அதிகாலை தேசிய நெடுஞ் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, தெலங்கானா மாநிலம், மேதக் மாவட்டம், சீராக் பல்லி என்ற இடத்தில் வந்தபோது, திடீரென பஸ்ஸின் இன்ஜினிலிருந்து புகை வந்தது.
இதனை பார்த்த எல் அண்ட் டி சாலைத் தொழிலாளர்கள் உடனடியாக பஸ் டிரைவருக்கு சைகை மூலம் தகவல் தெரிவித்து பஸ்ஸை நிறுத்தினர். பஸ்ஸில் பயணம் செய்த 45 பயணிகள் உடனடியாக இறக்கப்பட்டனர். பின்னர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்குள் தீ வேகமாக பரவி பஸ் முழுவதுமாகக் கருகியது. உரிய நேரத்தில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.