நீதி ஆயோக் துணை தலைவராக அரவிந்த் பனகரியா இன்று (செவ்வாய்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராஜஸ்தான் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவரான இவர் பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பொருளாதார வல்லுநனரான அரவிந்த் பனகரியா, நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார வல்லுனராக இருந்த இவர் சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். அவர் கிட்டதட்ட 10 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் 2008-ல் “இந்தியா- தி எமெர்ஜிங் ஜயன்ட்” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
அரவிந்த் பனகரியாதான் நீதி ஆயோக்கின் முதல் துணை தலைவர். திட்ட குழுவிற்கு பதிலாக மத்திய அரசு நீதி ஆயோகை உருவாக்கியுள்ளது.