நோபல் பரிசு வென்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று சந்திக்கிறார். சிரி கோட்டை அரங்கில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. பின்னர், ஒபாமா அங்கு உரையாற்றுகிறார்.
அதன் பின்னர் ஒபாமாவும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் சவுதி அரேபியா புறப்பட்டுச் செல்கின்றனர்.
இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி. பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலாவுக்கு 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கைலாஷ் சத்யார்த்தி மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில் 1954-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி பிறந்தார். 1990-ம் ஆண்டு "பச்பன் பச்சாவோ ஆந்தோலன்' (குழந்தையைப் பாதுகாப்போம் இயக்கம்) என்ற அமைப்பை நிறுவிய இவர், நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். இந்த அமைப்பு மூலம் இதுவரை இந்தி யாவில் 80 ஆயிரம் குழந்தைகளை பல்வேறு சுரண்டல்களில் இருந்து மீட்டு, அவர்கள் கல்வி கற்க உதவியுள்ளார்.