இந்தியா

இந்தியாவில் ஆட்குறைப்பு செய்ய கோககோலா நிறுவனம் முடிவு

பிடிஐ

பன்னாட்டு குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோககோலா, இந்தியாவில் ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளது.

'செயல்படும் மாதிரியை மறு வடிவமைப்பு செய்தல்' என்ற தங்களது உலகளாவிய நடைமுறைகளின் படி உலகம் முழுதுமே ஆட்குறைப்பு செய்யப்போவதாக கோககோலா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோககோலா இந்தியாவின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, "கோககோலா சமீபத்தில் அறிவித்த தொலைநோக்கு உற்பத்தித் திறன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, எங்களது செயல்பாட்டு மாதிரியை மறு வடிவமைப்பு செய்கிறோம். இதன் மூலம் எங்களது உலகளாவிய வர்த்தகத்தில் வளர்ச்சியை முடுக்கி விட எங்களது அமைப்பை ஒழுங்கு செய்து, எளிமைப்படுத்தவிருக்கிறோம்.

இதனையடுத்து நாங்கள் ஏற்கெனவே அங்கீகரித்தபடி, மறுவடிவமைப்பினால் இந்தியா உட்பட பல நாடுகளில் ஆட்குறைப்பு செய்வது தவிர்க்க முடியாதது.

இந்த மறுவடிவமைப்பு குறித்து நிறுவனம் இன்னமும் பரிசீலனை செய்து வருவதால், இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை இப்போது கணிக்க முடியவில்லை." என்றார்.

தங்கள் வர்த்தகச் செயல்பாடுகளில் உலகம் முழுதிலும் திறன்களை அதிகரிக்க 2019-ஆம் ஆண்டுக்குள் சுமார் 3 பில்லியன் டாலர்கள் வரை செலவினங்களை குறைக்கப்போவதாக கோககோலா நிர்வாகம் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவித்தது.

SCROLL FOR NEXT