இந்தியா

ஆர்.கே.லக்‌ஷ்மண் மறைவுக்கு குடியரசு தலைவர் இரங்கல்

செய்திப்பிரிவு

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்‌ஷ்மண் மறைவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது: "ஆர்.கே.லக்‌ஷ்மணின் மறைவு செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இது எனது சொந்த இழப்பாக கருதுகிறேன். ஏனென்றால் நான் அவருடைய கேலிசித்திரங்களின் ரசிகன் மட்டும் அல்லாமல் அவருடைய சித்திரங்களுக்கு கருவாகவும் இருந்துள்ளேன். சாதாரண மனிதனை தேசிய சின்னமாக மாற்றிய மாபெரும் கலைஞனை இந்தியா இழந்துவிட்டது. சமுதாய செய்திகளை அவர் நகைச்சுவை மூலம் வெளிப்படுத்தினார். அதிகாரத்தில் உள்ளவர்களும் மனிதர்களே என்பதை மக்களுக்கு நினைவு ஊட்டினார்.

பத்ம விபூஷண் விருது பெற்ற ஆர்.கே.லக்‌ஷ்மண், தனது கேலிசித்திரங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு பொறுப்பை உணர்த்தியதுடன் தானும் மனசாட்சியுடன் நடந்து கொண்டார். அவருடைய மறைவு கலை உலகத்தில் சமூதாயத்திலும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த இடத்தை நிரப்புவது கடினமான ஒன்றாகும்" என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT