காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராபர்ட் வதேரா ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி எனும் நிறுவ னத்தை நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் திட்டங்களைச் செயல் படுத்தி வரும் இந்த நிறுவனத்துக்கு டெல்லி மற்றும் குர்கோனில் அலுவலகங்கள் உள்ளன.
இந்த நிறுவனத்தின் வர்த்தக பரிமாற்றங்கள் குறித்து 2005-2006ம் ஆண்டு முதல் விவரங்கள் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறை வட்டாரங்கள் கூறும்போது, "பொதுமக்களிடமிருந்து சில தகவல் கள் கிடைத்ததை அடுத்து இந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளது.
கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்றவு டன் தேவைப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்" என்றன.