இந்தியா

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி பொங்கல் வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.

இதேபோல், போகி, மகா பிஹூ, மகர சங்கராந்தி ஆகிய பண்டிகைகள் கொண்டாடும் மக்களுக்கும் தெலுங்கு, அசாமீஸ், குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளிலும் வாழ்த்து பதிவு செய்திருக்கிறார்.

ட்விட்டரில், "நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளுக்காக நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT