இந்தியா

கொலை மிரட்டல் விடுத்ததாக உ.பி. எம்.பி. புகார்

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஒருவர் தனக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீஸில் புகார் செய்துள்ளார்.

அப்னா தளம் கட்சியைச் சேர்ந்த பிரதாப்கர் மக்களவை தொகுதி உறுப்பினர் குன்வர் ஹரிவன்ஷ் சிங் தனது புகாரில், “எனது செல்போனுக்கு வந்த அழைப்பை உதவியாளர் ஏற்று பேசினார். அப்போது அதில் பேசிய மர்ம நபர் என்னை கொலை செய்யப் போவாதாக மிரட்டி உள்ளார்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அப்னா தளம் கட்சிக்கு 2 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT