இந்தியா

கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண் கவலைக்கிடம்

செய்திப்பிரிவு

பிரபல கார்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண், உடல் நலக் குறைவு காரணமாக புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக தொற்று காரணமாக லஷ்மண் கடந்த சனிக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஐ.சி.யு. பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், லஷ்மணனின் பல முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டதாகவும், வென்டிலேட்டர் பொறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT