மத்திய அமைச்சரின் சர்ச்சைக் குரிய கருத்துக்கு பிரதமர் அளித்த விளக்கத்தை தொடர்ந்து கேள்வி எழுப்ப முயன்றபோது தனது மைக் ஆஃப் செய்யப்பட்டதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகார் கூறினார்.
மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் கார்கே இப்பு காரை கூறினார். அவர் மேலும் கூறும்போது, “கடந்த வெள்ளிக் கிழமை பிரதமரின் விளக்கத்தை தொடர்ந்து நான் கூறியது அவைக் குறிப்புகளிலும் இடம்பெற வில்லை. மக்களவை டி.வி.யும் அதை ஒளிபரப்பவில்லை. ஒரு தரப்பினரின் நலன்களை பாது காக்கும் வகையில் நீங்கள் (சபாநாயகர் சுமித்ரா மகாஜன்) செயல்படுகிறீர்கள். இது போன்ற சம்பவம் மீண்டும் நடை பெறக்கூடாது” என்றார்.
தொடர்ந்து கார்கே பேசும் போது, “ஒரு பிரச்சினையை மீண்டும் மீண்டும் எழுப்புவது அவை நடவடிக்கைகளை சீர் குலைக்க வேண்டும் என்ற நோக் கத்தில் அல்ல. முக்கியப் பிரச்சினை என்பதால் சபாநாய கரின் கவனத்துக்கு கொண்டுவர விரும்பினேன்” என்றார்.
இதற்கு நாடாளுமன்ற விவ காரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பதில் அளிக் கும்போது, “பிரதமரின் விளக்கம், அதைத் தொடர்ந்து கார்கே பேசியவை அவைக்குறிப்புகளில் இடம்பெறும். என்றாலும் காங் கிரஸ் தலைவர்கள் பேசியதில் சில பகுதிகள், உறுப்பினர்களின் அமளி காரணமாக தெளிவாக இல்லை” என்றார்.
இதையடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறும்போது, “ஒரு உறுப்பினர் பேசுவதற்கு நான் அனுமதி அளித்த பிறகு மைக் ஆன் செய்யப்படுகிறது” என்றார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் மாவோயிஸ்டுகளுடன் ஏற்பட்ட மோதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். இவர்கள் அணிந்திருந்த சீருடைகள் அரசு மருத்துவமனை ஒன்றின் வெளியில் உள்ள குப்பைத் தொட்டியில் கிடந்ததாக கூறி காங்கிரஸ் உறுப்பினர் சி.வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தார்.
பூஜ்ய நேரத்தில் அவசரமாக விவாதிக்க வேண்டிய முக்கியப் பிரச்சினைகளை மட்டுமே எழுப்ப வேண்டும் என்பதால் இதற்கு அனுமதி மறுப்பதாக சுமித்ரா மகாஜன் கூறினார்.