இந்தியா

வாக்களித்தால் ஏ.சி., ஃபிரிட்ஜ், கார் பரிசு: தெலங்கானா ஆட்சியர் அறிவிப்பு

என்.மகேஷ் குமார்

தெலங்கானா பகுதியில் இன்று நடக்கும் தேர்தலில் வாக்காளர்களை கவரவும், தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிக வாக்கு பதிவாகும் கிராமத்திற்கு நானோ கார், ஏ.சி., ஃபிரிட்ஜ், வழங்குவதாக மேதக் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் இளம் வாக்காளர் களை கவரும் வகையில், வாக் களிக்கும் ஒவ்வொருவருக்கும் மொபைல் ரீசார்ஜ், பெட்ரோல் போன்றவற்றில் 10 சதவீதம் மானியமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பால், மேதக் மாவட்ட மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தெலங்கானா பகுதியில் 119 சட்டமன்ற தொகுதிகள், 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெறுகிறது. கடந்த தேர்தல்களில் இந்த மாவட்டத் தில் மிக குறைந்த அளவே வாக்குப்பதிவு நடந்தது. இதனால், வாக்காளர்களை கவரும் வகை யில், மேதக் மாவட்ட ஆட்சியர் ஸ்மிதா சபர்வால் இத்திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதாவது, 95 சதவீதம் வாக்கு பதிவாகும் கிராமத்திற்கு குலுக் கல் முறையில் ஒரு வாக்காளரைத் தேர்வு செய்து, நானோ கார் பரிசளிப்பதாக அறிவித்துள்ளார். மேலும், 90 சதவீதம் வாக்கு பதிவாகும் கிராமத்தில், ஃபிரிட்ஜ், ஏ.சி., போன்றவற்றை பரிசளிக்க உள்ளார். மேலும் வாக்களித்த வயதானவர்களுக்கு பாராட்டு விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளார். கலெக்டரின் இந்த விழிப்புணர்வு திட்டம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT