இந்தியா

27 ஜார்க்கண்ட் குழந்தைகள் நேபாளத்துக்கு கடத்தல்: காவல் துறை விசாரணையை தொடங்கியது

செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்​கண்​டின் மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தின் 27 குழந்​தைகள் நேபாளத்​துக்கு கடத்​தப்​பட்​ட​தாக புகார் எழுந்​தது. அவர்​களை மதம் மாற்ற முயற்சி செய்​யப்​பட்​ட​தாக​வும் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

கடத்​தல்காரர்களின் பிடியில் இருந்து தப்​பித்​து வீடு திரும்​பிய 2 குழந்தைகள் தங்​கள் பெற்​றோரிடம் நடந்​ததை விவரித்​தனர். இதையடுத்து இந்​தச் சம்​பவம் வெளிச்​சத்​துக்கு வந்​தது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அமித் ரேணு நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

குழந்​தைகள் கடத்​தல் குறித்து வழக்​குப் பதிவு செய்​யப்​பட்டு விசா​ரணை தொடங்​கி​யுள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாக, அவ்​விரு குழந்​தைகளின் கிராமத்​துக்கு போலீஸ் குழு சென்​றது. அந்த கிராமத்​தில் மட்​டும் 11 குழந்​தைகள் நேபாளத்​துக்கு கடத்​தப்​பட்​ட​தாக தெரிய​வந்​தது.

இவர்​களில் 4 பேர் வீடு திரும்​பினர், 5 பேர் இன்​னும் நேபாளத்​தில் உள்​ளனர். அவர்​களை திரும்ப அழைத்​துவர மாவட்ட நிர்​வாகம் நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது. மேலும் 16 குழந்​தைகள் நேபாளத்​துக்கு கடத்​தப்​பட்​டது தெரியவந்​துள்​ளது. ஆனால் இது தொடர்​பாக இது​வரை எந்​தப் புகாரும் வரவில்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT