இந்தியா

சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

செய்திப்பிரிவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் வழங்கட்டும்" என மோடி தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சோனியாவுக்கு இன்று 68-வது பிறந்தநாள். ஆனால், அண்மையில் காஷ்மீரில் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கும், சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பலியானதற்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என சோனியா ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT