இந்தியா

பாகிஸ்தானுக்கு துணை நிற்போம்: பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலை கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் பள்ளிக்கூடம் மீது நேற்று முன்தினம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தருணத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா துணை நிற்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பெஷாவர் நகரில் அந்நாட்டு ராணுவம் நடத்தும் பள்ளிக்கூடத்தில் புகுந்த தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 132 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இவர்கள் தவிர மேலும் 9 பேரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந் தோருக்கு மக்களவை, மாநிலங் களவை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தில் கூறப் பட்டுள்ள விவரம்வருமாறு:

மனித நேயத்தின் மீது நம் பிக்கை வைத்துள்ளவர்கள் தீவிர வாதத்தை தோற்கடிக்க கைகோக்க வேண்டும் என்பதற் கான அழைப்புதான் பெஷாவர் சம்பவம். இந்த கொடிய தாக்குதல் சம்பவம் மனதை உறைய வைக் கிறது. கொடூரமான, கோழைத்தன மான இந்த தாக்குதலை மக்களவை கண்டிக்கிறது.

அப்பாவிகள், குழந்தைகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை சகித்துக் கொள்ளக் கூடாது. கொடிய, மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்துபவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்கப் பட வேண்டும். இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஹமீது அன்சாரி கூறும் போது, “மிருகத்தனமான கோழைத் தனமான இந்த தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது. அப்பாவி குழந்தைகள் பலரின் உயிரைப் பறித்துள்ள இந்த சம்பவம் மனதை உருக வைக்கிறது. மன உறுதியுடன் தீவிரவாதத்தை எதிர்கொண்டு ஒடுக்க வேண்டும் என நம்மை தட்டி எழுப்புவதாக இந்த சம்பவம் உள்ளது” என்றார்.

பின்னர் மாநிலங்களவையில் ஹமீது அன்சாரி தலைமையில் உறுப்பினர்கள் சில மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

மக்களவையில் பெஷாவர் பள்ளி தாக்குதல், ஆஸ்திரேலி யாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு உணவகத்தில் தீவிரவாதி ஒருவர் புகுந்து பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்தது ஆகியவை பற்றி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

கடந்த 2 தினங்களில் நடந்த சம்பவங்கள் தீவிரவாதத்தின் வெளிப்பாடு ஆகும். தீவிர வாதத்தை தோற்கடிக்க மனித நேயத்தில் நம்பிக்கை வைத்துள்ள வர்கள் கைகோக்க வேண்டும் என்பதற்கான அழைப்புதான் இந்த இரு சம்பவங்களும்.

தீவிரவாதத்தை ஒடுக்க உலக அளவில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு தனது பங்கை அளிக்க இந்தியா தயாராக உள்ளது என்றார் சுஷ்மா. இதே அறிக்கையை மாநிலங்களவை யிலும் சுஷ்மா ஸ்வராஜ் தாக்கல் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் இரவு பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை தொடர்புகொண்டு, இக்கட்டான நேரத்தில் பாகிஸ்தான் மக் களுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும் தாக்குதலில் உயிர் நீத்த பிஞ்சுகளின் பெற்றோருக்கு இந்தியா சார்பில் தனது மன வேதனையை பிகிர்ந்து கொள்வ தாக தெரிவித்தார் என்றும் சுஷ்மா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT